காதல் இமைகள் இதயங்கள் உன்னோடு 555

வாழ்க்கை.....
நட்புச் சோலையில்
நறுமணம் வீசி...
அரும்பிய காதலை
அம்பலப் படுத்த...
இனிமை
கவிதைகளும்...
இனிப்புகளும் கைசேர...
நாட்குறிப்பில் சுழிபோட்டு
நங்கூரமான காதலர் தினம்...
வழி துணைக்கு நட்பு...
வாழ்க்கை துணைக்கு காதல்...
வெற்றிக் கனிகள் பல இருந்தும்...
வெற்றிட வாழ்வை நிரப்பும் காதல்...
காதல் இமைகள் கண்ணிசைவால்...
கம்பீரமாகும் இதயங்கள்...
பிறந்த நாளையும் பின் தள்ளி...
பிரபலமானது பிப்ரவரி பதினான்கு...
வாழ்கையும் காதலும்...
கைசேரும் காதலென்று...
காலமெல்லாம் காதல் வாழ்க.....