தானத்தில் சிறந்த தானம்

அன்னதானம்
அழகிய கண்தானம்
உபயோகப் படும் உடலுறுப்பு தானம்
உண்மையிலேயே இவை போற்றத் தக்கது
இல்லாதவர்களுக்கு
இருப்பவர்கள் கொடுப்பது
இது இனிமையிலும் இனிமைதான்
இதற்கு ஈடு இணை இல்லைதான்.... சரி....!

இருப்பதை புரிந்து கொள்ளாமலேயே
இன்னல் படுபவர்களை
என்னவென்று சொல்வது....?

சிரிக்க சந்தர்ப்பமிருந்தும்
சுள்ளானாக சிலர் இருப்பர்.....

பழகத் தெரியாமல் உறவு இழந்து
பணமிருந்தும் ஏழையாகப் பலர்

வாழப் பழகுமுன்பே....
வாழ்க்கையை முடித்துக் கொண்டு.....

இனிதான சந்ததிகளை
இயந்திரமாக மாற்றிவிட்டு
இறுதி யாத்திரையில் செல்கிறார்கள்....

இதுதான் வாழும் முறையன்று
இனிதாய் நாம் வாழும் முறையும்
இந்த வகையில் ஒரு தானம் அன்றோ ? !

வாழ்த்து காட்டுவோம் - தெரியாதவர்கள்
வாழ்ந்து பழகட்டும்.......

நம்மால்..........

தற்கொலைகளை தடுக்க முடியும்
தன நிலைமை உணர வைக்க முடியும்
தன்னம்பிக்கை வளர்க்க முடியும்.......
தானத்தில் இது சிறந்த தானமஅன்றோ ? !

எழுதியவர் : (3-Mar-12, 3:25 pm)
பார்வை : 484

மேலே