கல் நெஞ்சு

அடிப் பெண்ணே!
என் கண்ணீரைக் கண்டு
என்று நீ கள்ளம் என்றாயோ?
அன்றே, என் அழுகையும் அந்தமாகிவிட
கண்ணீரை நிறுத்திய கண்களும்
காட்சியை வெறுத்துவிட
காயம் பட்ட என் இதயமோ இன்று
கலங்குவதேனோ, உன் காதலை நினைத்தல்ல
கருணை இழந்த உன் கல் நெஞ்சை நினைத்து.
- குட்டி