விஷம் ,,,,,,,,,,,,
பிள்ளை வரம் வேணுமுன்னு
மாரியாத்தா கோயிலுல
மண்சோறு சாப்பிட்ட ஆத்தா
சோதிடன் சொன்னான்னு
திருச்செந்தூர் முருகனுக்கு
மூணு மொட்ட போட்ட ஆத்தா
நீ இடுப்பு உளைஞ்சு நிக்கையில
வயிறு வலியால அலறி துடிக்கையில
என்னவெல்லா கனவு கண்டிருப்ப
மகராசன் பிறப்பான்னு
மண்ணெல்லா போன்னாகும்னு
மண் குடிசை மாளிகையாகும்னு
அப்படித்தானே ஆத்தா
போலிசு டிரசுல பந்தாவா வருவான்னு
கலெக்டராகி காருல வருவான்னு
கனவு கண்டியா ,,,,,,,,,,,,,
இப்படித்தானே ஏகப்பட்ட ஆத்தாக்கள்
கனவு கண்டிருக்காக
கள வெட்டி கையெல்லா
காய்ப்பு விழுந்து
உச்சி வெயிலுல முந்தானைய தலையில போட்டுக்கிட்டு
உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சு போயி
பத்து பைசா வட்டிக்கு கடன் வாங்கி
உச்சி முகந்து உள்ளமெல்லா வெல்லமாகி
கல்லூரிக்கு அனுப்புனியே ஆத்தா
படிக்க வச்ச பாடு பட்ட
என்னத்த சொல்லுவ நான்
பாவிபய நாட்டுல
வேலையில்லா திண்டாட்டம்
விஷம் போல பரவுதம்மா
வேலையு கிடைக்கலியே வேதனையு தீரலியே
படிச்ச மகன் மாடு மேய்க்கானு
பரிதவிச்சு கண் மூடி போனியா நீ
வேலையில்லா திண்டாட்டம்
மண்மூடி போகனுங்க
சமூகத்த மாற்னுங்க
சரித்திரம் படைக்கனுங்க