தீ வளர்ப்போம்

எம்மை
மன்னிப்பீர் மகாத்மா!

எம்மை
ரட்சிப்பீர் கர்த்தரே!

காந்தியத்தைக்
கத்தி முனையில்
காக்க வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம் நாங்கள்...

என்ன செய்வது?

இங்கே
சமாதானப் பூக்களைக் கூட
ரத்தம் ஊற்றித்தான்
வளர்க்கவேண்டியிருக்கிறது...

நாங்கள் ஆசைப்படுவதென்னவோ
நந்தவனம் வளர்க்கத்தான்.
ஆனால்
அதைக் காக்க
முள்வேலியை
முன்மொழியாமல்
முடியாது....

ஆம்,

சாத்விகம் என்பது
கோழையின் பேச்சு
ரௌத்திரம் என்பதே
வீரனின் மூச்சு!

எங்கள் பொறுமையை
எங்களின் கோழைத்தனமென்று
எதிரிகள்
அர்த்தப்படுத்திக் கொள்ள
அனுமதிக்க மாட்டோம்!

எங்கள் பாதையை
பூச்செடிகள்
போர்த்தியிருந்தாலே
பிடுங்கி எறிவோம்,

மண்டிக் கிடப்பது
முட்செடிகள் என்று தெரிந்த பின்பும்
மௌனம் காக்க முடியாது....

ஆம்,

சாத்விகம் என்பது
கோழையின் பேச்சு
ரௌத்திரம் என்பதே
வீரனின் மூச்சு!

மானம் காக்க
உயிர்கொடுப்போம் என்ற பழமொழி
எங்கள் தலைமுறையோடு நிற்கட்டும்.

மானம் காக்க
உயிர் எடுப்போம் என்ற புதுமொழியை
இனிவரும் தலைமுறைகள்
கற்கச் செய்வோம்....


தயவு செய்து
எம்மை
மன்னிப்பீர் மஹாத்மா!

எம்மை
ரட்சிப்பீர் கர்த்தரே!

அஹிம்சை என்பது
அழகுக்கு மீசை வளர்க்கும்
அலிகளுக்குப் பொருந்தலாம்

எமக்குப் பொருந்தாது...

இனி நாங்கள்
சமாதானத்திற்கு கூட
புறாக்களையல்ல
பருந்துகளை வளர்க்கவே
பிரியப்படுகிறோம்.

ஏனெனில்,

தாயின் கருவிலேயே
நாங்கள்
உதைக்கப் பழகியது
இப்படி
ஊமையாய் அழுவதற்கன்று...

(இலங்கை கடற்படையினரால்
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்துக்
கொல்லப்பட்ட போது எழுதியது)

-ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (7-Mar-12, 11:44 pm)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 187

மேலே