!!!சீமந்தம் !!!
ஒரு தாய்க்கு இரண்டாமாவது
மூன்றாமாவது
சேயா(ய்)வள் இருந்தாலும்,
மூத்த பிள்ளையை பெறுவதிலோ
ஆயிரமாயிரம் கனவுகள்- அந்த
அழகிய தருணத்திலவளின் எண்ணம் ...
ஒன்பதாம் மாதமாம் -தங்கமே !
உள்ளம் மகிழ்ந்து ஊர் கூடி
சுற்றம் சூழ சீர் கொண்டு வருவானாம்
உன் தாய் மாமன் ,
வண்ண வண்ண வளையலோடும்
வாழைபழத் தட்டோடும்,
தித்திக்கும் தேங்காயோடு
மாங்கனியை எடுத்துகொண்டு-உன்
மாமன் வந்து ,பிணி தீர்க்கும்
மஞ்சளை பூசி -உன்
எண்ணம் சிறக்க சந்தனத்தை இட்டு ,
உன் வாழ்க்கை வசந்தகாலமாய்- ஒளிர
வத்தியோடு கற்பூரத்தைதேற்றி
வண்ண வளையலை மாட்டிவிட்டு
என் அன்னையுள்ள கோயிலுக்கு -உன்
அன்னையை அழைத்துச் செல்ல .
இந்நாளை எண்ணி எண்ணி
மாதம் எட்டயும் வருடங்கள்
எட்டாய் கழித்தேன் ,
இனியுள்ள இரு மாதமும்
ஒரே நாள்தான் எனக்கு ...
என்னிரு தினங்களில் நான்
வளர்ந்த அன்பு இல்லத்தில் -உன்
பூம்பாதம் படபோகுமென
அகம் மகிழ்கிறேன் .......