மரணத்தின் பாதை...!!!
என் மாட மாளிகை கலை இழந்துபோனது...
என்னவள் என்னை விட்டு மறைந்ததை எண்ணி ...
என் தோட்டத்து மல்லிகையும் கருகிப்போனது...
தன்னை பரிப்பவள் சாம்பலாகிவிட்டதை எண்ணி ...
சிரிப்பையும் மறந்து , அழுகையையும் மறந்து உன்னுடைய நினைவுகளை மட்டும் சுமந்து
நீ சென்ற இடம் நோக்கி என் கால்களின் பயணம் ...
என்னவளே எனக்காக காத்திரு இதோ வந்துவிட்டேன்...
ஒரே சுவாசமாய் சுவாசித்திட ...
ஒரே கண்களில் கண்டிட ...
ஒரே இதயமாய் துடித்திட ...
ஒரே உயிராய் ஜீவித்திட ....
தொடர்கிறேன் என் பயணத்தை.....!!!!
என் வாழ்க்கையின் இறுதி கவிதை ....!!!