என் வாழ்க்கை
சாய்வான மேசை உயர்ந்த நாற்காலி........
மேசையில் என் ஆயுள் காகிதம் நாற்காலியில் நான்...
ஆயுள் காகிதத்தில் என் வாழ்க்கையை..........
நடனமாடி வரைந்தது ஒரு கருப்பு பேனா..........
மிக நீளமாய் சோகமாய் தெரிந்தது ஆயுள் காகிதம்....
மூன்றில் ஒன்றே போதுமென முற்றுப்புள்ளி
வைத்தது அந்த பேனா...........
விழுந்தது ஒரு துளிநீர்(கண்ணீர்) இழுத்து சென்றது....
முற்றுப்புள்ளியை காகிதத்தின் இறுதிவரை.........
இப்போது வெள்ளை காகிதமாய் என் மீதி வாழ்க்கை....