வறுமையும் வாழ்கையும்
தண்ணிய குடிச்சு வளந்தவங்க நாங்க
வெறும் தண்ணிய குடிச்சு வளந்தவங்க நாங்க
அதையும் மனுசங்க அழிக்க பாக்குராங்க
இப்ப அதையும் மனுசங்க அழிக்க பாக்குராங்க
வாய்க்கும் கைக்கும் சண்ட போட்டதில்லிங்க
ஒரு சான் வயிறுக்கு தான் பிச்சை எடுக்குரோங்க
வயிர நிரப்ப தான் வழி தெரிய வில்லிநிங்க
வறுமை மட்டும் தான் எங்களுக்கு சொந்தங்க
ரூபா நோட்ட கண்ணுல பததில்லிங்க
பஸ்சுல போக நினைச்சதே இல்லைங்க
வாழ்கிற வாழ்க்கை ஒரு கேள்வி குறி தானுங்க
வளரும் பிஞ்சுக்கு தான் அது கூட தெரியாது
வழியில போறவங்க என் நிலையை கேட்டதில்லை
நானும் என் நிலையை யாரின்டமும் சொன்னதில்லை
மனுசன படச்சவன் தான்
நிம்மதியா இருக்குறான்
மனுசனும் இப்ப இங்க
நிம்மதியா இழக்குரன்
பணமும் இருக்குது
பதவியும் இருக்குது
அங்கயும் கூட நிம்மதி இல்ல
இங்க பணமும் இல்லை
பதவியும் இல்லை
இங்கயும் கூட நிம்மதி இல்ல
ரேசன் கார்டு இல்லை
அரிசிய பாத்ததில்லை
அரிசியை பார்த்தவனும்
அதையும் மதிப்பதில்லை
கீழ கொட்டுனாலும்
எங்களுக்கு கொப்டுப்பதில்லை
இது தான் எண்களின்
வறுமையின் வாழ்கை
வறுமையின் வாழ்கை

