அன்பு தங்கை பாயிஜாமாவின் நினைவில் .....

அன்பு தங்கைக்கு...

அதென்ன அன்பு தங்கைக்கு... அன்பு மட்டிலும் தங்கைக்கா...அல்லது
அன்பு என்றாலே தங்கைதானே... அவசர பட்டி மன்றம் இங்கே வேணாம்..
ஏனென்றால் என் அன்பே = தங்கைதானே..


திமிறி திரிந்த காளை கூட்டத்துக்கு ( நம் சகோதர கூட்டம் )..
கடிவாளம் போட்ட பாச கடவுளம்மா நீ..
அன்பான அண்ணன்கள் கூட்டம்.. ஆசையாய் தங்கை நீ..
ஆனந்த நம் குடும்பம் அல்லாஹ்வின் பரக்கத்தன்றோ..

அண்ணா என்ற உனது அழைப்பில் பிறவி பயன் கிடைத்ததம்மா..
இனி வரும் ஏழு ஜென்மம் இந்த புகழ் எனக்கு போதுமம்மா..
பதினெட்டு வயதிலே பன் மடங்கு பட்டவள் நீ...
நடு பாதி வயதினிலே நாடாள போகிறாய் கண்ணே..

திருமணம் ஆனாலும் எங்களுக்கு நீ குழைந்தைதான்..
எங்களுக்கு என்றென்றும் உன் வயது ஓர் ஆறு தான்..
உனை மனம் புரிந்த மச்சான் ஒன்றும் மாற்றான் இல்லையம்மா..
பொக்கிஷத்தை பாது காக்க வந்த புது காவலன் அவன்தானம்மா..

வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் ஆனவளே..
சந்தேகம் வேண்டாம்.. வாழ்க்கையிலும் உனக்குத்தான் முதலிடம் அன்பே..
"பணி"க்காலம் தொடங்கும் முன் பாசக்காலம் உன்னோடு..
பனிக்கால தொடரிலும் தொடர்வதன் ஆச்சர்யம் என்ன.. !!!

சிரித்து மட்டும் பேசாமல் சிந்தித்து பேசும் விழியஅழகே..
சிரித்த உன் பார்வை என் கோபத்தை அறிக்கும் மாயமென்ன..
உன் விருப்பம் அதுவென்று உனக்கென வாழாமல்
பிறர் விருப்பம் உனதாக்கி உருகி வாழும் உணர்வென்ன...

ஏன் என்று கேட்காமல் எனக்கென்று அழுபவளே...
பாசத்தின் வலியின் வேகம் கண்ணீரில் தெரியுதடி..
ஒரு தாய் வயிற்றில் பிறக்க நாம் செய்த தவம் என்ன...
அடியேன் மறுமுறை உன் அண்ணனாய் பிறக்க ஆயுள் தவம் இருப்பேனடி..

நம் பாசம் சொல்லி கொள்ள ஒரு கவிதை போதாது..
சொல்லி கொண்டே போனால் என் இரு விழி தாங்காது...
பாசத்தின் பரிதவிப்பை பக்கங்களில் சொல்லிவிட்டால்
காகிதம் குளித்துவிடும் என் கண்ணீரில்..

அப்பாவின் அரிதரமாய் என்னை அறிமுகம் செய்தாய்...
அடியேனின் பாச கவிதையை ஏற்று கொள்ளடி சுட்டி பெண்ணே..
அம்மா என்னும் ஓசையில் என்னை அண்ணா என்று அழைப்பவளே..
அம்மாவின் நிழலாய் உனை நாங்கள் எல்லாம் வணங்குவோமடி..

எழுதியவர் : கலிபா சாஹிப் (11-Mar-12, 10:17 pm)
பார்வை : 1887

மேலே