தீர்ப்பு நாள் ! (இறப்புக்கு பின் )
இறைவன் மனிதனை படைத்ததும்
மரணமும் குறிக்கப்பட்டு விடும்
இன்னும் உலகில் வாழ்ந்த நிலை
செய்த வணக்கங்கள்
கொடுத்த தர்மம்
செய்து வைத்த பாவம்
இதையெல்லாம் உடனுக்குடன்
கணக்குகளாக எழுதப்படும்
நாம் சிந்திப்பதை விட - உலகில்
பொருள் சேர்பதில் தான் கவனம்
உலக வாழ்க்கை அல்ல சந்தோசம்
மறுமை வாழ்க்கைதான் சொர்க்கம்
என்ன சேர்த்து வைத்தோம் மறுமைக்கு
விடை காணாமல் வாழ்வு துனியாவில்
பேரும், புகழும் பூமியில் வாழும்
செய்த நன்மைதான் உடன் வரும்
மரணம் நிகழும் நொடி பொழுதில்
தீர்ப்பு நாள் இன்னும் அருகில்
செய்யும் வணக்கமே சாட்சி சொல்லும்
உனக்கும் , எனக்கும் தீர்ப்பு நாளில்
தீர்ப்பு நாள் - இறுதியாக
எல்லோருக்கும் உண்டு உறுதியாக ..........
-ஸ்ரீவை.காதர் -