நாணல் !

நதியோரம் நீ வளர்ந்து
நாணத்தோடு தலை சாய்ந்து

தென்றலை தொட்டு தாலாட்டி
வென்மேகங்களுக்கு நீ அசைந்தது

பச்சை நிறம் கொண்டு ஆனந்தமாய்
இயற்கையுடன் கை கோர்த்து

வளைந்து கொடுக்கும் மென்மை - உன்
உடன் பிறந்த தன்மை

நாணல் !

வளைந்து கொடுக்கும் வாழ்க்கை
நமக்கொரு பாடம் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (11-Mar-12, 9:18 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 464

மேலே