இறைவன் தேடும் தவம்

இறைவன் தேடும் தவம்


புலால் உண்ண மறுத்து
புண்ணியம் தேடி
தவமிருந்தாய்
மிஞ்சியது உன் பணம்!

தொல்லை காட்சியை
நிறுத்தி தூங்காமல்
தவமிருந்தாய்
மிஞ்சியது உன் நேரம்!

மதுவை மறந்து
புகையை வெறுத்து
தவமிருந்தாய்
மிஞ்சியது உன் கௌரவம்!

தீயவை விலக்கி
தீதொன்றும் நாடாது
தவமிருந்தாய்
தூய்மையானது உன் மனம்!

தியான மறையுரையில்
தவறாமல் ஒன்றித்து
அன்புறவானாய்
அருமையானது உன் ஆன்மா!

இதுவா எனக்கேற்ற தவம்!
என்றைக்கு அயலாருக்காக
உன் நேரம்,உன் பணம்,உன் மனம்,உன் ஆன்மா,உன் கௌரவம்
ஆகிய இவற்றையெல்லாம்
செலவிடுவாயோ!!
அதுவே எனக்கேற்ற தவம்.

எழுதியவர் : கசிகரோ (11-Mar-12, 9:08 pm)
பார்வை : 222

மேலே