!!இயற்கையெல்லாம் இன்று செயற்கையடா !!!
சாறாககிய சட்டியெங்கே ?
சோறாக்கிய சிறு பானையெங்கே ?
அன்னம் கிண்டும் அகப்பையெங்கே ?
மாதர் அரிசி குத்தும் உலக்கையெங்கே ?
மாவாட்டும் உரலெங்கே ?
மஞ்சளரைக்கும் அம்மியெங்கே ?
மரமெல்லா மெங்கே ?
மாதம் மும்மாரி மழையெங்கே ?
வானம் பொழியவில்லை
பூமி விளையவில்லை
விளைநிலங்க லெங்கே ?
வீட்டு மனைகளா கங்கே .
இப்படி இந்திய விவசாயமும்
இடுப்பொடிந்த நிலையின்று
இயற்கையெல்லாம் அழியுதடா
செயற்கையெல்லாம் வாழுதடா ..
வேண்டும் பொருளாதார முன்னேற்றம்
வேண்டாம் இயற்கையில் மாற்றம்......