விளைச்சல் !

வேர்வையை சிந்திய மண்ணில்
விதைத்த மணித்துளிகளை

வீறு கொண்டு தலையில் சுமந்தது
களத்து மேட்டுக்கு கால்நடையாய்

இந்த வருடம் மகசூல் கூடுமா
கற்பனையை மனதில் கொண்டு

செந்நெல் கதிருடன் இங்கே - தலையில்
கட்டாக கட்டிய மனகோட்டையில்

போர் அடிக்க மேட்டு நோக்கி
போகின்றான் உழவன் மகன் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (12-Mar-12, 8:15 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 198

மேலே