மனிதன் மிருகமாகிறான்

முதல் குட்டி முதல் நாள்
இரண்டாம் குட்டி இரண்டு நாள் கழித்து
மூன்றாம் குட்டி முப்பது நாள் கழித்து

நல்லதங்காளை போல
ஒவ்வொரு வீடு முன்னும்
குட்டியேய் போட்டு கத்தியது

கதவை திறப்பார் யாரும் இல்லை
கால் தவறி மிதித்தார் இறந்தது
முதல் குட்டி

தூக்கி போடா மட்டும் ஆள் வந்தது
இருக்க இடம் குடுத்தும் இருக்கவில்லை
குட்டி போட்ட பூனை அப்படிதானம்

திறக்காத கதவின் அருகே
அடிகடி குட்டியேய் போட்டு கத்தியது
கதவை திறப்பார் இல்லை

ஒவ்வொரு வீடு கதவின் முன்னும்
நின்ற பூனை ஒவ்வொரு முறையும்
ஒரு குட்டியேய் இழந்தது

பேச தெரிந்தால் இன்று பூனையின்
ஒப்பாரி சத்தம் கேட்க்கும் இரவெல்லாம்
பூனையும் ஒரு தாய் தானே

மூன்று குட்டிகளை ஈன்றது பூனை
மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாய் மடிந்தது
காரணம் ஒன்றுதான் .

மனிதனின் மனிதாபி மானம் ச் சீ சொல்ல வைக்கிறது .

எழுதியவர் : jagadeeshwaran (12-Mar-12, 8:09 pm)
பார்வை : 269

மேலே