கண்ணிருந்தும் குருடராய்!! sirukathai
கண்ணன் உடைந்து போனான் .
எத்தனை வேலைக்கு இண்டர்வியு போயிட்டு வந்தாச்சி. ம்ஹும் ..ஒரு வேலையும் தகுதிக்கு தக்க வாறு கெடைக்கலியே!
எத்தனை நாளுக்குத்தான் தெண்டச்சோறு பட்டம் வாங்கிட்டு இருப்பது. ம்ம்ம்....இன்ஜினியரிங் படிச்சி என்ன பிரயோஜனம் . வீட்டுல வறுமை
வேலையோ இல்ல. என்ன பண்ணறது .சாதாரண வேலைக்கெல்லாம் போனா.. இவ்வளவு படிச்சி ..ச்சே ..அசிங்கம்.
அவனவன் காரு பங்களா ன்னு வேலைக்கு போன ஒரு வருஷத்தில வாங்கிட்டு லை.:ப என்ஜாய் பண்ணிட்டுருக்கான் . நமக்கும் ஒரு பொழப்பு ,நார பொழப்பு...ச்சே
என்னடா பொலம்பிக்கிட்டு இருக்க .வந்து கொட்டிக்க . நாலு காசு சம்பாதிக்க துப்பில்ல .
அப்பா அங்கலாய்த்தார்.
சும்மா புள்ளைய சொல்லால சூடு வைக்காதீங்க .
இவ்வளோ படிச்சிபுட்டு தெரு பெருக்கிற வேலைக்கா போமுடியும் ..இது அம்மா
தெரு பொறுக்கிற வேலைய தானடி இப்போவும்
செய்துக்கிட்டு இருக்கான். இவன நம்பி பத்து காசு வீட்டுக்கு வருதா சொல்லு. எவ்வளவு சிரமப்பட்டு இவன எஞ்சினியரிங் படிக்கவச்சேன் . ஊரைச்சுத்தி கடன் .கடன்காரன் துப்பாகியால சுட்டாக்கூட போயி சேந்துரலாம். சொல்லாலைல்ல சுடுரானுவ. எத்தன நாளைக்குதான் இந்த பொழப்பு .
கண்ணனால் அதற்கு மேல அங்கே இருக்க முடிய வில்லை.
விர்ரென்று வெளியேரிவிட்டான்.
தெருவில் விறு விறு என்று நடந்து மெயின் ரோட்டுக்கு வந்தான்.
கடை வீதி பரபரப்பாக இருந்தது .
எதிலோ இடித்துகொண்டவன் ?
சாரி ..சாரி ..சார் .
பரவால்ல சார் .
அவர் கையிலிருந்த பேனாக்கள் சிதறி கீழே
விழுந்தன . அவரும் கொஞ்சம் அதிர்சியாகித்தான் போனார்.
கண்ணன் கீழே சிதறிய பேனாக்களை பொருக்கி அவரிடம் கொடுத்து மறுபடியும் சாரி சொல்வதற்காக திரும்பிய போதுதான் அவர் ஒரு பார்வை இல்லாதவர் என்பதை அறிந்து மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.
அவர் பள்ளி குழந்தைகளுக்கு விற்பதற்கான புத்தகங்களையும் வேறு சில விளையாட்டு சாமான்களையும் வீதி ஓரத்தில் கடைவிரித்திருந்தார்.
என்ன அன்புதுரை இன்னிக்கு வியாபாரம் எப்படி ?தன் நண்பரோடு அந்த பக்கம் வந்த பேராசிரியர் பிரகாசம் விசாரித்தார்.
பரவாயில்லசார்.
M .A .Mphil படிச்சிருக்காரு . காலையில ஆறு மணியிலிருந்து பத்து மணி வரைக்கும்பத்தாம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுக்கிறாரு . சாயங்காலம் அஞ்சி மணியிலிருந்து ஏழு மணிவரை இது மாதிரி பேனா புத்தகங்கள் வாங்கி விக்குராரு. இடைப்பட்ட நேரத்துல தன்னை போன்ற பார்வையற்றவர்களுக்கு அரசாங்க சலுகைகளை பெற்றுத்தர சம்பந்த பட்ட அலுவலர்களை சந்தித்து
பெட்டிசன் கொடுத்து அவங்க சங்கத்தின் மூலமா உதவி செய்யுறாரு. எதுக்கும் கைம்மாறு இல்லாம சந்தோஷமா செய்துகொடுப்பாரு. ஒரு நேரம் கூட சும்மா இருக்கமாட்டாரு பாருங்க!
தன் நண்பரிடம் பேராசிரியர் பெருமையுடன் சொன்னார்.
என்ன அன்புதுரை வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு.
நல்லா போய்க்கிட்டுருக்கு சார்.
புள்ளைங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க .
ரெண்டு பையன்களில ஒருத்தன் எஞ்சினியரிங் மூணாம் வருஷமும் இன்னொருத்தன் மெடிக்கல்
நாலாம் வருஷமும் படிசிக்கிட்டிருக்கக்ங்க சார்.
ஒரே ஒரு பொண்ணு .அவளுக்கு கல்யாணம் பண்ணிகொடுத்திட்டேன் .மகளும் மருமகனும் ஒரு பாங்க்ல வேல பாக்குறாங்க.
அன்புதுரை மகிழ்ச்சியோடு சொன்னார்.
அடேங்கப்பா .எவ்வளவு சாதனை பண்ணி இருக்கீங்க .ரியலி க்ரேட் .
இந்த சின்ன வியாபாரத்துல இவ்வளவும் செய்ய
சம்பாதிக்க முடியுதா ?
சார் .சாதிக்க இந்த தொழில் தானுல்ல. நேர நிர்வாகதத (டைம்மானேஜ்மென்ட் ) நல்லா செய்தால் எதிலும் சாதிக்கலாம்.
நேரம் என்பது பணத்துக்கு சமானம்.
எப்படி செலவு பண்ணுறது என்பது தான் இதிலுள்ள ரகசியம்.
நேரத்த சரியா நிர்வாகம் பண்ணிணாலே ஒரு நல்ல
இன்வெஸ்ட்மென்ட் பண்ணின மாதிரித்தானே. தன்னம்பிக்கையும் உழைப்பும் கூட இருந்தா எதையும் சாதிக்கலாமே.
கண்ணன் மவுனமாய் கேட்டு கொண்டிருந்தான் .
அவன் மனம் இப்போது சலனமற்று இருந்தது. !!
சிறிது நேரம் அவருக்கு உதவி செய்தான்
வாழ்க்கையை புரிந்து கொண்டான்.
சிலருக்குமனதில் இருட்டு ,வெளியே வெளிச்சம் .
சிலருக்குமனதில் வெளிச்சம் வெளியே இருட்டு.
ஒவ்வொரு வினாடியிலும் வாழ்க்கை இருக்கிறது.