யார் குருடு ?.(ஒரு பக்க சிறு கதை.)

இவர்கள் இப்படி .

தொபுக்கடீர்.

எம்மா...ஆ ..ஆ ...!

தடுக்கி விழுந்த வேகத்தில் உருண்டு எழுந்து கை கால்களை உதறி விட்டு ,துரத்தி வந்த இன்னொரு சிறுவனின் பிடிக்கு அகப்படாமல் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன் .

காலை வாக்கிங் வந்த கனவானின் பிடியில் இருந்த அவரின் செல்ல நாய்குட்டி அதன் மீது காலைத்தூக்கி சிறுநீர் கழித்துவிட்டு விடுதலை உணர்வில் அவரோடு ஆனந்தமாய் நடைபயின்ற்றது .

அவருக்கும் அக்கறையில்லை !!

பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்த நண்பர்களிலொருவர் அதன் மேல் இடறி வலியால் காலை தடவி, யார் இந்த சனியனை இங்கே போட்டது என்று முனகிக்கொண்டே கடந்து சென்றார்கள் .

மாட்டுவண்டி ஒட்டியும், காரோட்டியும் அதை பார்த்து கவனமாக விலகி ஒட்டிசென்றார்கள் .

இவர் இப்படி.

ஒரு சிறு கைத்தடிதான் அவருக்கு வழி காட்டி. கைத்தடியை தரையில் தட்டி கொண்டே நடந்து வந்தவரின் தடியில் ஏதோ தட்டுபட சிறிது நின்று .சுற்றுமுற்றும் தன் காதுகளை கூர்மையாக்கினார் .
அங்குமிங்குமாக மக்கள் பரபரப்பாய் கடந்து சென்று கொண்டுதானிருந்தார்கள் .

இவர் சற்று நிதானித்து இடது புறமாக ஊன்றுகோலை தட்டிகொண்டு தெருவின் ஓரத்தை ஆராய்ந்தார் .
அப்படியே வலது புறத்தையும் .

பின் ஒரு முடிவுடன் அந்த இரண்டு கிலோ எடைஉள்ள கல்லை கைகளில் தூக்கி இடது ஓரமாக இருந்த பள்ளத்தில் கொண்டுபோய் போட்டாரர்..

அவர் ஓரத்தில் அந்த கல்லை போடவும், பைக்கில் வந்த ஒருவன் தடுமாறி அம்மா..ஆ...ஆ என்ற அலறலுடன் முதலில் அந்த கல் கிடந்த அதே இடத்தில் விழவும் சரியாக இருந்தது. பிழைத்து கொண்டான்.

சொல்லுங்கள் !! யார்குருடு ?.

எழுதியவர் : தில்லைசிதம்பரம் (13-Mar-12, 11:19 pm)
பார்வை : 698

மேலே