அம்மாவின் கவிக்கு அரசனான்

மாலை வேளை
மகிழ்ச்சியான செய்தி
மத்தாளம் கொட்டி
கொட்டி தீர்த்தான்
கோமானின் காவாலாளி ........

சீர்மிகு சிறப்பு கவிக்கு
பொற்கிழி காத்திற்கு
என்ற செய்தி அது .....

பட்டாளத்து சிப்பாய் போல
படை படையாய் அணிவகுத்து
அரண்மனை நோக்கி ஐக்கியமானார்கள்
அறிஞரும் கவிஞரும்

கோமான் அமர்ந்தான்
காகித கோட்டையை
காட்டினான்
எத்தனை வேண்டுமானாலும்
அத்தனையும் எடுத்துக்கொள்ளுங்கள்
கவி படைக்க துவங்குங்கள்
தலைப்பு தருகிறேன் என்றான் ......

அவலாய் அவையவரும்
அமைச்சர்களும் பார்த்தனர்
அது என்ன தலைப்பு என்று .....

சாமிக்கு கூட இல்லாத
பூமியில் வாழும்
ஜீவராசிகளில்
சிலகாலம் இரு உயிரோடு
வாழும் ஒரு ஜீவம் அதுதான்
''அம்மா'' எனற தலைப்பு

வியப்பாய் பார்த்தவர்கள்
அட ப்பு என்று பெருமூச்சி
விட்டனர்
தினம் தினம் பார்க்கும் கவிதை
அழைக்கும் போதே கவிதை பாடும் அழகு
எனக்குதான் பொற்கிழி
எழுத தொடங்கினர் கவிஞர்கள்

காகித கோட்டையின்
காகிதங்கள்
கவிதைகளாய் மாறியது
வாசிக்க தொடங்கிய
மன்னன்
வாயடைத்து போனான்
கண்ணீர் துளிகளாய்

அதில் ஒரு கவிஞன்
வெற்று காகிதத்தை
வைத்துவிட்டான்
பின் குறிப்பு மட்டும்
எழுதிவிட்டு

அரசனுக்கு அடங்காத
கோபம் பின் குறிப்பை பார்க்காமல்
யார் அங்கே
அவனை சிறை பிடியுங்கள்
என்றான்

பிடிபட்ட கவிஞனின்
பின்குறிப்பை பார்த்து
பொற்கிழியை மட்டும் மல்ல
தன் அரண்மனையில்
அமைச்சராக்கினான்

என்ன பின் குறிப்பு
'பக்கம் பக்கமாய் எழுதினாலும்
பூமி முதல்
ஆகாயம் வரை
காகிதத்தை அடிக்கிவைத்தாலும்
அவ்வளவுதான் அவளின்
அளவாகிவிடும்"

எல்லோரும் அந்த கவிஞனின்
கால் தொட்டு போனார்கள் ...........................

எழுதியவர் : தபரேஜ் (12-Mar-12, 11:54 am)
பார்வை : 558

மேலே