வியாபாரம்
சந்தையிலே வியாபாரம்
சக்கைப்போடு போடுது
சகலதும் விற்பனையாச்சு
மிச்சம் விலை பேசியாச்சு
உரிமை விற்றாச்சு
உண்மை விலைபோச்சு
உயிர்கள் பாதி வியாபாரமாச்சு
மீதி பேரம் பேசியாச்சு
மானம் முக்கால் மூட்டை கொடுத்திருக்கு
காற்கிலோபோல் காத்திருக்கு
சுதந்திரம் சுண்டுவிரலளவும் இல்லை
சந்தோசம் சதத்துக்கும் இல்லை
சந்தையிலே எல்லாம்
போட்டி போட்டு விலையாச்சு
செல்லாத சில மட்டும்
சீரழிந்து கிடக்குது
அப்பாவிகளின் கண்ணீர்
அல்லலுறும் அகதிகள்
ஊனமுற்ற உயிர்கள்
யாருமற்ற அநாதைகள்
வியாபாரப் பட்டியலில்
விலைபோகா இவற்றை
வாங்கத்தான் யாருமில்லை