என்னவனின் முத்தம்

அன்பின் அடையாளமாய்
இவ்வளவு நாள் நீ கொடுத்து
நான் வாங்கியிருக்கிறேன் !
நான் கொடுத்து நீ வாங்கிருக்கிறாய் !

நீ கோபமாய் இருக்கும்போது நான்
அழுத்தமாய் பதிக்கும் கோபமுத்தம் !
என் முகத்தில் சரியும் கூந்தலைவிலக்கி
கொடுக்கும் சுகமான முத்தம் !!

நீ பேசிய
அந்த நொடியில்
என் மனதை கொடுத்தேன் !
நீ கேட்டபோதெல்லாம் முத்தத்தை
மொத்தமாய் கொடுத்தேன் !!

இவ்வளவு
நாள் பிரிவிற்கு பிறகு நீ கொடுத்த
அந்த சின்ன முத்தம் !! அடடா !!
என் ஏழேழு ஜென்மமும்
வாழ்ந்துவிட்ட திருப்தி !!

அதனால் தான் பாரதிசொன்னானோ !
சிறு பிரிவு காதலை அதிகபடுத்துமென்று !!

எனக்கென நீ நிறைய செய்திருக்கிறாய்
உனக்கென நான் ஒன்றுதான்
செய்யபோகிறேன் நான் என்றும்
நானாகவே இருப்பேன் !!!
எப்போதும்
உன்னவள் ஆக மட்டுமே !!!

எழுதியவர் : VALARMATHIRAJ (16-Mar-12, 12:08 pm)
சேர்த்தது : வளர்மதிராஜ்
Tanglish : ennavanin mutham
பார்வை : 471

மேலே