திரும்பிப் பார்க்கிறேன்

அரட்டை அரங்கத்தில்
அழகாக ஈழத்தைப் பற்றி
பேசினார்களாம்!!! என் தம்பி
பாரி சொன்னான்

எங்கே போனார்கள் இவர்கள்
என் இனமே …..
கொத்துக்…கொத்தாய்
செத்தொழியும் போது…

கதியற்று நம் இனம்
கதறும் போதும் …நாம்
கலக்கப் போவது யாரு? என்று
கலகலப்பகத்தானே இருந்தோம்

உலகமே என் இனத்தை
உதிரம் சொட்டச் சொட்டச் கொன்ற போதும்
உலக தொலைக்காட்சில் முதல் முறையாக என்று
உள்ளம் களித்து தானே இருந்தோம்….

செத்துக் கிடப்பவன் எம் உறவு
என்பதை மறந்து அதிகக் காட்டி
வித்து பிழைத்தவர்கள் தானே ….
நம் உறவுகள் …..

கை பேசியில் கடலை போட
நமக்கு நேரம் இருக்கும்
கதறும் உறவுக்கு கை கொடுக்கவா
நமக்கு நேரம் இருக்கும்….

வந்த இனத்தை எல்லாம்
வாழ வைக்கும் எம் இனம் – தன்
சொந்த இனத்தை
விட்டு விட்டது தான் ஏன்?

ஈழத்தில் ஒரு கருணா
பணத்திற்கு இனத்தை விற்றான்
இங்கேயும் ஒரு கருணா…
இவரிடம் நிறைய நிதி இருக்கிறது …
பதவிக்காக ….பந்தங்களை விற்றான்

விபத்தில் சிக்கியவன்
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று பிடுங்கும்…
மனித நேயம் மரத்து போன – நம்மிடமா
இன மானம் இருக்க போகிறது …

எழுதியவர் : தமிழன் மணியன் (16-Mar-12, 7:56 pm)
சேர்த்தது : tamilan manian
பார்வை : 219

மேலே