முத்தம் முச்சுவை

முத்தம்
இதழ்களின் இன்பம்
என்றான்
நேற்று இல்வாழ்க்கை
துவங்கியவன்

முத்தம்
இதழ்கள் தரும் இலக்கியம்
என்றான்
நேற்று நள்ளிரவில் எழுத்தில்
கவிதை எழுதத்
துவங்கியவன்

முத்தம்
முதல்வன் சொன்ன
இன்ப தத்துவம் என்று ஏற்று
அடுத்தவன் சொன்ன வழியில்
கவிதையில் கடிதம் எழுதுகிறேன்
என்றான் நேற்று மாலையில்
காதலில் விழுந்தவன்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Mar-12, 2:00 pm)
பார்வை : 705

சிறந்த நகைச்சுவைகள்

மேலே