உனையன்றி வேறில்லை
அன்பே
வாழ்வில் பிடிமானம் இல்லாமல் - நான்
வாழ்ந்த போது பிடிப்பை தந்தது நீயல்லவா
உன் தோழமையில் கண்டுகொண்டது
நிஜத்தின் மறுபக்கமல்லவா
பாலவனக்கானல்களில் பசுமையை
விதைத்தவனும் நீயல்லவா ...
உன்கரம்கோர்க்க நினைக்கிறது மனது
அதை தடைபோட்டு வைக்கிறது மௌனம்
நான் யாசிப்பது உன்னையன்றி வேறில்லை
தினம்தோறும் உன்குரலோடு
நான் இயற்றும் தவங்களுக்கு வரங்களாய்
என் ஆயுள்முழுக்க நீ வேண்டும்