பெண்ணே நீ செய்த பாவமென்ன ?

இரக்கமென்ற வார்த்தைக்கு
சொந்தமானவள் அன்னையே இவ்வுலகில்

அன்னை பாசத்தை மிஞ்சிய பாசம்
இவ்வையகத்தில் இல்லையடி

காதலில் சுகம் கண்டு
கள்ளத்தன உறவு கொண்டவளோ

சிறு ஈர நெஞ்சம் கொண்டு
குப்பை தொட்டியிலாவது வீசுவாள் -உன்னை

அறிந்தோர் சிலர் அனாதை
இல்லதிலாவது சேர்ப்பாரென எண்ணி.

பத்து மாதம் உன்னை சுமந்து
பெற்றெடுத்த உன்னன்னையே

நீ பெண்ணென தெரிந்ததும்
கள்ளிபாலை கண்டு

கொண்டு வந்து கொன்று
குழந்தை உனக்கு கொள்ளி வைக்கிறாளே!

பெண்ணே !
நீ செய்த பாவம்தான் என்ன ?

குழந்தை இல்லையென
கோடிதவம் புரிகின்றனர்

அவர்களுக்கு நீ இருந்திருந்தால்
அன்புக்கு அரசியாய் இருந்திருப்பாய்

பெண்ணே!
நீ செய்த பாவம்தான் என்ன ?

ஒருநாள் வாழும் மலர்கள்கூட
பிறந்த பயனை அடைந்துவிட்டு இறக்கின்றன

ஆனால் பிஞ்சு நீயோ பிறந்த
கணமே இறக்கின்றாயே !

பெண்ணே!
நீ செய்த பாவம்தான் என்ன ?

பென்சிசுகொலைக்கு கடுந்தண்டனை
என அரசாங்கம் அறிவித்தும்

பிஞ்சு உனக்கு எருக்கம்பாலை
கொடுக்கிறாளே உன் அன்னை

அவளும் பெண்தான் என்பதை
எப்படி மறந்தாளோ?

பெண்ணே !
நீ செய்த பாவம்தான் என்ன ?

தாய்பால் குடித்து வளரவேண்டிய-நீ
கள்ளிப்பால் குடித்து இறக்கிறாயே!

பெண்ணே !
நீ செய்த பாவம்தான் என்ன ?

பிஞ்சுகளை கொல்லவேண்டாமென
அரசாங்கம் அறிவிக்கிறது

அன்பே உருவான உன் அன்னைக்கிது
தெரியவில்லையே என மனம் பதறுகிறது

தற்போது அதிகமில்லை உன்னழிவு
என்றாலும் ஓரிரண்டு இருக்கிறதே !

என வெம்புதே என்மனது ......

எழுதியவர் : ப்ரியாராம் (20-Mar-12, 5:03 pm)
பார்வை : 262

மேலே