" எழுத்து நண்பர்களுக்கு ஒரு கேள்வி
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதை மயக்கம் ஆனால் எதோ ஒரு
கலக்கம் என் மனதில் !..
யாதேனும் இல்லையோ ?.. என்
தமிழைப்போற்ற இம்மண்ணில் !....
பல நூரு கவிதை எழுதினேன் ஆனால்
நினைவில் எதுவும் இல்லை...
சிலதொரு கவிதை படித்தேன் எழுத்துவில்
அதன் ஆயுளோ என்
உயிரின் எல்லை !....கல்லூரி
கவிதைப்போட்டியில் ஆண்டுதோறும்
பரிசுகள் பல வாங்கினேன், காலப்போக்கில்
அது கானல் நீரில் கரைந்த உப்புகள் !...
ஆனால் எழுத்துவில் மாதப்பரிசுக்கு
விலைப்போகவில்லை
எனது படைப்புகள்!... ஐயகோ சன்மானம்
வேண்டாம் எனக்கு
எழுத்து நண்பர்களின் கருத்து போதும்
எனக்கு !... ஆனால்
கிடைத்துதே இல்லை ஒருபோதும் என்
கவிதைக்கு நண்பர்களின்
கருத்து !.. என்றும் வெற்றிடமே என்
கவிதைக்கு கீழே !...
காதல் கவிதை , நண்பர்கள் கவிதை ,
ஹைக்கூ கவிதை, காதல்
தோல்வி கவிதை அனைத்தும்
எழுதிவிட்டேன் உங்கள்
கருத்துக்காக !.. யாதென இனி நானெழுத
உங்கள் பொன்னான
கருத்துக்காக !.. பதில் சொல்லுங்கள் ?