உஷார்...!

காதலித்தேன்
காதில் கேட்கவில்லை ;
பெற்றோரின் வார்த்தைகள்..!
அவளோடு சுற்றினேன் பணக்காரனாய்...!
கல்யாண செய்திக்கு பிறகோ
நண்பன் கஞ்சன் என்றான்..!
அம்மா பெண்டாட்டிதாசன் என்றாள்..!
அப்பாவோ பேசவே மறுத்தார்..!
அண்ணன் பொறுப்பாய் இரு என்றான்..!
நாட்கள் சென்றது
குழந்தை பிறந்தாள் குதூகலித்தேன்..!
கூடவே..
வாயையும்..சூ.....வையும் ;
மூடிக்கொண்டு..!
வேறென்ன செய்ய ?
வறுமை வாட்டிஎடுக்க,
காதலின் வெற்றி கூட
சில தருணங்களில் தோல்வியாய்...!