ஓயா சிறகுகள்

அதி வேகமாய்............
எனது படகை கடந்து சென்ற
விரைவு படகுகள்
அதனதன் படகு துறைகளில்
இப்போது ஓய்ந்து கிடக்கும்.

அதில் பயணித்தவர்கள்
யாத்திரை களைப்பில்
அவரவர் குடம்பத்துடன் நிம்மதியாய்
கண்ணயர்ந்திருப்பார்கள்

நானும் கூட
மிக பாது காப்பாய்
எனது
சொந்த தீவிற்கு வந்தடைந்து விட்டேன்.

பாவம்.....!
பசியோடும் ....
தாகத்தோடும்......
அனாதையாய் பறந்து கொண்டிருந்த
அந்த சிறிய பறவை........
அந்த பெரிய கடலை
இந்நேரம்
கடந்திருக்குமோ .......
கடந்திருக்காதோ................!

எழுதியவர் : ந.புதியராஜா (22-Mar-12, 4:20 pm)
சேர்த்தது : puthiyaraja
பார்வை : 152

மேலே