இறவா மழை

"கிணற்றுக்குள் விழுந்த மழை
முங்கிடாதா,
செத்து விடாதா?
எனக்குப் பயமாக இருக்கிறது
- சித்தி
அது எப்படி, எப்போது
வெளியே வரும்?
மழைக் கண்களோடு
கேட்டாள் குழந்தை.
ஆழத்தை அருந்திச்
சரேலென்று மேலேறிப்
படபடத்த
தாமிர நீலப் பறவையின்
சிறகுகள் சொட்டிச் சொட்டிச்
சொல்கின்றன,
"இப்படி இப்படி" - என.

எழுதியவர் : (27-Mar-12, 5:44 pm)
பார்வை : 149

மேலே