வாழ்ந்திட வேண்டும்
நிலம் போல
நானுன்னைத்
தாங்கிட வேண்டும்!
நீரைப் போல
உன் தாகம்
தீர்த்திட வேண்டும்!
காற்றைப் போல
உன் மூச்சில்
நிறைந்திட வேண்டும்!
கனல் போல
உன் ஜீவன்
காத்திட வேண்டும்!
வானம் போல
என்றன்றும்
உனைப் பிரியாமல்,
வாழுகின்ற
நாளெல்லாம்
வாழ்ந்திட வேண்டும்!