அழகின் அழகே

அழகின் அழகே நீ தானடி
உலகில் உனக்கு இணை யாரடி
உயிரின் உயிரே நீ தானடி
உன்னை மறக்க முடியாதடி .

உன்னை பார்கலனா என்
உணர்வுகள் கொல்லுதடி
உன்னை பார்க்கணும்னு என்
உள்ளம் சொல்லுதடி .

உன் சின்ன சிரிப்புச்சத்தம்
அந்த நிலவையும் மயங்கவைக்கும்
அடி நீயே வருத்தப்பட்டால்
பாற்கடலும் வற்றிவிடும்.

என் இதயத் துடிபினில்தான்
அடி நீயும் இணைந்திருக்க
அடி நீயே பிரிந்துவிட்டால்
என் உசிரும் மறைந்திடுமே .

எழுதியவர் : ஜெயகாந்தன்.பொ (12-Sep-10, 4:51 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
Tanglish : azhakin azhage
பார்வை : 655

மேலே