என்றும் உன்னவளாய்

நீ கொடுத்த ஒற்றை ரோஜா -என்
கைக்கு வந்து சேரும்முன்னே
உதிர்ந்தது போல் என் நினைவுகளும்
உன் மனதிற்குள் நிலைக்காமல்
உதிர்ந்து விட்டதா ? சொல்லன்பே !
அதனால்தான் அப்படி ஒரு வார்த்த்தையா ?

நீ சொன்ன ஒரு வார்த்தையே
உன்னிடமிருந்து என்னை பிரித்து விட்டது
உன்னை மறக்கிறேன் என்று சொல்லி
உன்னைவிட்டு பிரிந்தேன் எல்லாம்
உந்தன் ஒரு வார்த்தையால் !

உன்னோடு பேச இனி என்னிடம் வார்த்தை இல்லை என்று சொல்லி உன் தொடர்பை
துண்டித்தேன்
உன் ஒரு வார்த்தையால் !

உன்னை மறந்து விட்டேன் என்றுசொல்லி
உந்தன் நினைவுகளுடன்
தினம் தினம் மரணத்தை தொடுகிறேன்
உந்தன் ஒரு வார்த்தையால் !

உனக்காய் உன்னை விட்டு பிரிந்தாலும்
என்னால் உன்னை விட்டு பிரிந்து
போக முடியவில்லை உன் இன்பத்துக்காக
உன்னை விட்டு போகிறேன்
உன் நட்போடு என்றும் இருப்பேன் உன்னவளாய் .............

எழுதியவர் : (30-Mar-12, 2:58 pm)
பார்வை : 205

மேலே