மனம் எரிகிறது ......

சாக்கடை
கழிவுகளை
சுத்தப்படுத்தி
கரையில் எறிந்தேன்
நாற்றத்தில்
நாசி எரிந்தது ,

குப்பை
தொட்டிகளை
சுத்தம் செய்து
தீ இட்டு எரித்தேன்
கனல் சூட்டில்
முகம் வியர்த்தது ,

தெரு அசிங்கங்களை
கூட்டி வாரி குழியில்
போட்டு புதைத்ததில்
வாந்தி வந்தது ,

மூத்திர சந்தில்
மருந்து அடித்து முடித்ததில்
மூச்சி நாறியது ,

வலியோடு
என் - நாட்டை
சுத்தப்படுத்துகையில்
மனம் எரிகிறது
நன்றி கெட்ட
அரசியல் நாய்களை
ஏதுமே செய்ய முடியாமல்.

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (3-Apr-12, 5:54 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 181

மேலே