பிரிவேயில்லை

உன்னை உனக்குள்
கண்ணுற்றும்,
என்னை உனக்குள்
எண்ணுற்றும்,

பிரிவுக்கு இல்லையிங்கு
பிரிதொரு விளக்கம்.

பிரிந்து நிற்பதென்னவோ
எரி உடலின் வழக்கம்.

உயிர் உறைந்துகிடக்கும்
நினைவுகளின் கலக்கம்.

கறந்த பாலின் வெண்மை நிறம்,
கானகக்குயிலின் இசைச் சுவை,
கண்டுறங்கும் தென்றலின் கீதம்,
கடல்கொண்ட கடும் நுரையலை,
காதலின் அலைகொண்ட நம் நினைவு,

பிரியவேமுடியாததில் எப்படி
பிரியாவரம் அருளமுடியும்.
ஒட்டி உறவாட உலகுண்டு நமக்கு.
வெட்டியெறியும் வலிஎதற்கு உனக்கு.

எழுதியவர் : nilaa (5-Apr-12, 12:18 pm)
சேர்த்தது : ராச ராசாத்தீ
பார்வை : 217

மேலே