படைப்பாளி

படைப்பாளியானவர் கடவுள்.

முதல்தரமானவை
அவரின் மூலப்பொருட்கள்,

படைப்புகள் புரிய, கடவுள்
கற்றுக்கொடுப்பதில்லை.

ஒருமுறைப் படைத்தது,
இன்னொருமுறை இல்லை.

உருவாகின கவிதை,
மறுமுறை எழுதப்படுவதில்லை.

படைப்புகள் புதுமையானவை,
உண்மையானவை. தனிசிறப்பானவை.

இரண்டு மனிதர்களையோ,
ரோஜாக்களையோ, அவர்
ஒரேபோல் படைப்பதில்லை.

ஒரே மரத்தின் இரு இலைகள்கூட
ஒன்றுபோல் இருப்பதில்லை.

உடைந்து கிடக்கும் கல்கூட
உலகில் ஒரே மாதிரி இருப்பதில்லை.

இன்னொரு கிருஷ்ணனோ,
புத்தரோ, ஏசுவோ, அல்லாவோ
பிறக்கப்போவதுமில்லை

எழுதியவர் : thee (7-Apr-12, 2:10 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 201

புதிய படைப்புகள்

மேலே