பதில் பேசுங்கள் தோழர்களே...

தமிழனின் கூக்குரல்,
ஊமை உரைத்த வார்த்தைகளா, இந்த உலகத்தின் செவிகளுக்கு..?

ஒவ்வோர் தமிழன் சிந்திய கண்ணீரும்,
இனப்படுகொலைத் தீயில் இடப்பட்ட எண்ணைத்துளிகளா..?

பாவம் என் தமிழ்த்தாய்,
இமை மூடிய கண்களுக்குள்
இடி ஒன்று இறங்கிடவே,
கண்ணீர் வடிக்கிறாள், காலத்தை நினைத்து...
தமிழ் மறவர்களின் மனதில்
மறந்தார்ப்போல் விதைத்துவிட்டேனோ,
அஹிம்சை விதைகளை என்று..!

இலங்கை மண்ணில்-ஓர்
இருண்ட இரவில்-சிறு
பச்சிளம் குழந்தையின்
பாவைகள் இரண்டும் பேசிக்கொள்கின்றனவாம்..,
நாம் இமைகள் திறந்து உறங்கிக் கிடக்கிறோமா..?
இல்லை,
இமைகள் மூடுவதற்குள் இறந்து கிடக்கிறோமா..? என்று.

பதில் பேசுங்கள் தோழர்களே, பாவைகள் இரண்டிற்காவது...

-ஆனந்தன்.

எழுதியவர் : ஆனந்தன் (8-Apr-12, 8:09 am)
சேர்த்தது : Ananthan
பார்வை : 171

மேலே