ஈஸ்டர்

பொய்மையை உடைத்து
தீமைதனை கொளுத்தி
துன்பங்களை களைந்து
சாவினையும் வென்று
சரித்திரம் ஒன்று நிகழ்ந்தது
கல்லறை தகர்ந்தது - அதில்
புது வாழ்வு மலர்ந்தது
கிறிஸ்துவின் மெய் உயர
உண்மை உலகமதில் உயிர்த்தது

இரவு விண்மீன் ஒன்று
இன்று பகலவனாய்
பரிணாமம் எடுத்தது
இது கிழக்கே தோன்றி
மேற்கே மறைவதன்று
நாற்திசையும் நாற்பொழுதும்
நாடெங்கும் நம்பிகைதரும்
அணையா சுடரொளி - அதுதான்
கிறிஸ்துயென்ற பேரொளி

இவ்விகமதில் எதுவும் நிலையன்று
சாவும் அதற்கு விலக்கன்று - என
இயேசு இறப்பினையும் வென்று
சரித்திரத்தில் படைத்திட்டார் சான்று
அதுதான் ஈஸ்டர் பெருவிழா இன்று
உண்மை வாழ்வு ஒன்றே நன்று - அதை
அர்ப்பணமாய் இதயமதில் ஏற்று நின்று
என்றும் பகர்வோம் கிறிஸ்துவுக்கு சான்று

எழுதியவர் : ஆ. தைனிஸ் (8-Apr-12, 5:54 am)
சேர்த்தது : athainiscap
பார்வை : 1288

மேலே