பிரம்மனின் அதிசயம்
நேற்றிரவு என் வீடு முற்றத்தில் ஓர் அழகிய நிலவு தெரிந்தது
வீட்டில் யாருமில்லா நேரத்தில் மிக பிரகாசமாக இருந்தது
அதன் அருகில் சென்றேன் தலை சுற்றி நின்றேன் வந்திருப்பது
நிலவல்ல உன் அழகிய முகம் கரு நீல கூந்தலோடு நீள் வட்ட
முகத்தில் அழகிய புருவத்தில் ஸ்ட்ராபெர்ரி இமைக்குள் கருவண்டு
விழி பதித்து கண்களுக்கு பாது காவலனாக நீள் வட்ட கண்ணாடி அணிந்து
இதுவரை பார்த்திராத உன் மூக்கழகினை கண்டு பிரமித்தேன் படைத்தவன்
சத்தியமாக இறைவனாக இருக்க முடியாது அப்படி இருந்திருந்தால் அவன்
போதையில் தான் இருந்திருக்க வேண்டும் சற்று கீழிறங்கி பார்த்தேன்
மயக்கமே வந்தது முக்கனிகளில் சாறெடுத்து அதில் தேன் கலந்து
மெல்லிய ஈரத்தோடு வண்ணத்து பூச்சியிடம் நிறத்தை கடன் வாங்கி
உன் உதட்டை பார்கையில் போதையின் பானம் உன் உதட்டிலிருந்து
வடியும் ரசத்திலிருந்து தான் கண்டனரோ என வியந்தேன் அந்த
பிரம்மனே ஆழ்கடலில் முக்குளித்து தேடிஎடுத்த முத்தை கண்ணாடி
பேழையில் அடுக்கி வைத்தாற்போல் இருக்கும் உன் பல் அழகை
கண்டு சற்று தடுமாறித்தான் போனேன் அன்பே உன்னை இறைவன் படைத்தான்
என்று சொன்னால் அது பொய் கை தேர்ந்த சிற்பி செய்த சிலையை அந்த பிரம்மனும்
காமதேவனும் உன்னை கடத்தி சென்று மேலும் மெருகேற்றி அந்த காம சிறையில்
அடைத்து வைக்கையில் அங்கிருந்து தப்பி வந்த நிலவோ என்று வியந்தேன்