எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஹல்லோ செல்லம்.......!
ஹவ் ஆர் யூ தமிழ் தாயே
கம் கம் கம் டேக் யுவர் சீட்
இன்னாம்மா சாப்டறே நீயி
நாயர் கட சாயாவா ?
ஆட்டுகால் பாயாவா ?
கொஞ்சம் இரு இத்தாண்டுறேன்
அத்தன்னிக்கும் டிவி பாத்துக்கீனுரு ?
காச்சி மூச்சி சீச்சி போச்சி
வீச்சி பேச்சி மச்சி கொச்சி
கம் கோ சிங் தா தொ மா பா
கப்பு சிப்பு சக்கு சிக்கு மக்கு கிக்கு
ஒ டியர் கம் நியர் யூ எலக்ட்ரிக் ஒயர்
என்ன தமிழ் தாயே பாட்டு எப்டிக்கீது ?
இது தமிழ் பாட்டுத்தான்... நம்பு நீயி
இப்போல்லாம் தமிழ் சினிமா சாங்கு
இப்படித்தான் காது ஜவ்வு கிழியுது தாயீ....
கொஞ்சம் இரு நீ வாசலாண்டே
யாரோ பிச்சை காரனாட்டம் நிக்குறான்
யாருன்னு பாத்துட்டு வாரேன் நானு
யாருயா நீயி ? என்ன வேணும் ?
கயல்விழி கொண்ட கன்னிகையே அந்தக்
காலம் எனை புலவன் என்றது இந்தக்
காலம் எனை புலம்புவன் என்றது என்
குருதி கலந்த தமிழ் தெய்வம் நின்
குடிசையிலே வீற்றிருக்கிராலாம்
அகம்தனிலே இவ்வூன் நுழைந்து
அகத்தாலே அவள் தாள் பணிய வேண்டுகிறேன்
அனுமதி வழங்குவீர்களா பெண்மணியே ?
நீ சொல்லுறது ஒண்ணுமே வெளங்கலே போ
ஏம்மா தமிழ்த்தாய் இங்கே வாம்மா
இங்கே ஒருத்தன் புரியாத பாசை பேசி
இளிச்சுகினே கலாய்க்கிறான் பாரு
புலவன் அதிர்ந்து போகிறான்
தமிழ் தாயே என்ன கோலம் அம்மா ?
வெண் பட்டுச் சீலையில் கலை
வாணியாய் உன்னை எதிர் நோக்கினேன்
நீயோ ஜீன்ஸ் டி சர்ட்டில்
ஹவ் இஸ் இட் ? என்று வினா எழுப்பி
கேட்டபடியே புலவன் மயங்கி விழ
தமிழ் தாய் விறு விறுவென் டிஸ்கோத்தே வுக்கு
தனை மறந்து சென்று கொண்டிருந்தாள்.......
குறிப்பு :
நண்பர்களே / தோழிகளே
பொறுக்க முடியாமல் எழுதி இருக்கிறேன்
தமிழ் எப்போது தலை நிமிரும் ?
தமிழ் புத்தாண்டுக்கு காலையில்
கனிகள் நகைகளில் முழிப்பது இருக்கட்டும்
கன்னித் தமிழ் ஏடு எடுத்து
கற்க கசடற என தூய தமிழ் படிப்போம்
இன்று ஒரு நாளேனும்
பிற மொழி கலப்பின்றி
பைந்தமிழ் எழுதுவோம் பேசுவோம்
சுத்த தமிழனாய் வாழுவோம்
உங்கள் அனைவருக்கும்
எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்