விலை மாதர்

நான் விரும்பி செய்ய வில்லை
இந்த தொழிலை...
என் அரை வயிறு கழுவவே
அடி வயிறு வீங்குது.
இங்கு முந்தி விரிக்கும் முன்பே
விற்கப்பட்டது பல பேருக்கு
என் உடலும் மானமும்.
ஒவ்வொரு இரவு வரும் போதும்
நான் அழகு படுத்திக் கொள்கிறேன்
ஒரு IPL GROUND போல.
கலமாடுபவர்கள் யாரென்று தெரியாமலே?
என் பெயர் தேவதாசியாய்.
பின் தாசியாய்..
இப்போ விலைமாதராய்...

எழுதியவர் : சிவானந்தம் (12-Apr-12, 6:23 pm)
சேர்த்தது : சிவானந்தம்
பார்வை : 233

மேலே