எல்லாமே காதல்

நீ பார்த்தபோது எல்லாம்
பொழுதுபோக்குக்கு என தெரிந்தும்
சிரித்தேன் உன்னை நான்
விரும்புகிறேன் என உணர்த்தவே

நீ பேசியது எல்லாம்
பொய் என தெரிந்தும்
உரையாடினேன் உன்னை நான்
நம்புகிறேன் என உணர்த்தவே

நீ பழகியது எல்லாம்
உண்மையில்லை என தெரிந்தும்
பழகினேன் உன்னை நான்
காதலிக்கிறேன் என உணர்த்தவே

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (12-Apr-12, 6:25 pm)
Tanglish : ellaame kaadhal
பார்வை : 218

சிறந்த கவிதைகள்

மேலே