குட்டி ஜப்பான்
குட்டி ஜப்பான் என பெயர் வர
காரணமானவர்கள்
நாங்கள் !
உலகிற்கே காலத்தை காட்டுபவர்கள்
நாங்கள் !
அன்று அந்நிய குண்டுகளால் வெடித்து
சிதறியது அந்த ஜப்பான் !
இன்று எங்கள் குண்டுகளால் வெடித்து
சிதறுவது எங்கள் குட்டி ஜப்பான் !
வேகத்துடன் வெடித்து சிதறுவது
பட்டாசு மட்டுமல்ல ,
எங்கள் தேகமும்தான் !