பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்
அன்னை தந்திட்ட அன்பு தமிழ்நாடு
அழகு தமிழ் வளர்த்த தமிழா !
உன்னை வளர்த்திட்ட உயிர் தமிழ்நாடு
ஓங்கி வளர்ந்திட்ட உயர் தமிழா !
உறவினரை போல மற்றவரையும் பார்த்திடு
அவர்களிடமும் தன்னம்பிக்கையை வளர்த்திடு!
ஆன்றோரையும் சான்றோரையும் சமமாக பார்த்திடு
சமத்துவமான தூய அன்பை கண்டிடு !
ஜாதி,மத வேறுபாட்டினை களைத்திடு
ஒளிமயமான தமிழ்நாட்டை நீ கண்டிடு !
பிறப்பால் அனைவரும் ஒன்றென உணர்ந்திடு
பிரிவினை என்பதை கனவை மறந்திடு !
இறப்பிலும் அனைவரும் ஒன்றென உணரிந்திடு
இறந்தபின் பிரிவு காண இயலாததை அறிந்திடு
ஐந்தறிவு ஜீவன்களில் பிரிவில்லை கண்டிடு
ஐம்புலன்களில் இருக்கும் ஜாதிகளை அழிதிடு
தாவரங்களில் ஜாதிமத பாகுபாடில்லை கண்டிடு
தாவும் உன் மனதின் மதத்தினை ஒழித்திடு
தன்னலமற்ற தூய இந்தியா உருவாக புறப்படு
சமத்துவத்தை போற்றிவளர்க்க புறப்படு ! புறப்படு !