யார் என்னை புகழ்வதிங்கே...?

கார் மேகம் அழகென்பார்..,
கருங்கூந்தல் அழகென்பார்..,
யார் என்னை புகழ்வதிங்கே...!
என் மேனி கறுப்பழகை.

கருங்குயிலும் அழகென்பார்..,
காக்கை நிறமும் அழகென்பார்..,
உருக் கறுத்த என் அழகை ..,
உயர்திபேச எவருண்டு...?

கரடியை பார்த்தல் அழகென்பார் ..,
களிற்றின் நிறமும் அழகென்பார்..,
நிறம் கறுத்த என் அழகை..,
நினைத்துப் பார்க்க ஆளுண்டோ...?

கண்ணின் மணியே கருநிறம்தான்-தாயின்
கர்ப்பப் பையும் கருநிறம்தான்.
என்னைப் போல கரும் பெண்ணை -விரும்பி
ஏற்றுக்கொள்ள எவருண்டு...?

கறுப்பைக் கண்டு ஒதுக்காதே...!
கடவுள்கூட கருப்பந்தான்.
விருப்பம் கொண்டு ஏற்றிடுவாய்-நீ
விரும்பிய வண்ணம் நடந்திடுமே...!

எழுதியவர் : பசுவைஉமா (15-Apr-12, 11:25 pm)
பார்வை : 270

மேலே