ஏமாற்றத்தை எதிர்நோக்கி

ஒருமுறை "கேட்பாயா"
நட்பு வேண்டுமென்று !
ஒருகணம் "யோசிப்பாயா"
இழந்தது தவறென்று !
ஒருதரம் "சொல்வாயா"
உனை அறிந்தேனென்று !
ஒருநாள் "மன்னிப்பாயா"
உன்னை காயப்படுத்தியதற்கு !
என்றெண்ணி
காத்திருக்கிறேன் !
அடுத்த ஏமாற்றத்தை
எதிர்நோக்கியே !!!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 9:00 pm)
பார்வை : 305

மேலே