மீனே தங்க மீனே
கோவிலுக்கு சென்றால்
சாமி கும்பிடுவது மறந்து
கோவில் குளம் சென்று
பார்ப்பேன் ..............
நீ இருக்கும் இடம்
கோவில் குளம் தானே .......
மீனே தங்க மீனே
உனக்கு பொரி போட்டு
உன் பசி தீர்க்கும் போது
இறைவன் எனக்கு வரம்
தருவான் .........
இறைவனை மறந்தாலும்
உன் பசி மறவேன்