அந்த 5 நிமிடங்கள்

பலத்தக் காற்று வீச, காலெண்டரின் தாள்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்க ராஜா அன்றைய தேதியை பார்கிறான். 21/12/2012 (*டூம்ஸ் டே).பார்த்த படியே மெதுவாக அவன் தலையை திருப்பி டிஜிட்டல் க்லாக்கை பார்க்கிறான். நேரம் சரியாக இரவு 11.55. ஆனால் அதை நம்ப முடியவில்லை அவனால். காரணம்,கத்திரி வெயிலை போல வெளியே வெயில் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.நடப்பதை வியப்பாக பார்த்த படியே தன் அம்மாவை கூக்குரலிட்டு அழைத்தான்.யாரும் வரவில்லை.வீட்டில் உள்ள அறைகள் மூன்றிலும் தேடியும் குடும்பத்தினர் யாரையும் காணவில்லை.
பயம் அவன் கண்களில் சுடர் விட்டு எரிய ,கைகள் கால்கள் நடுங்கியபடியே வெளியே வருகிறான்.வேர்த்துவிருவிருத்து வெளியே வந்த அவனுக்கு அதிர்ச்சி பாய் விரித்து காத்துக்கொண்டிருந்தது. தெரு வெருச்சோடி காணப்பட்ட்து. மனித நடமாட்டத்தையே பார்க்க முடியவில்லை. “யாராவது இருகீங்களா ?“ என்று தன் கம்பீர குரலில் கத்தினான்.அவன் கத்திய வார்தைகள் அவனுக்கே மூன்று முறை எதிரொலித்தது. தூரத்தில் ஒரு தெரு நாய் “ஊ...ஊ...ஊ...ஒ...” என ஊளையிட்ட்து.பாதி பயத்துடனும் ,பாதி வியப்புடனும் உள்ளே வந்து,என்னதான் நடக்கிறது என்று டி.வி யை ON செய்யப் போன அவனுக்கு ஒரு உண்மை தெரிந்தது. அவன் வீட்டில் current இல்லை.
காற்றின் வீரியம் அதிகரிக்க , வெயிலின் சூடு கொதிக்கொதிக்க என்ன செய்வது என்று தெரியாத நிலையில் அவன் படுக்கையில் அமர்ந்தான்.திடீர் என்று “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் .....” என்ற பாடலை அவன் cell phone பாட ,அவசரமாக அவன் அதை தேட,அவன் நினைவிற்க்கு வந்தன அந்த அழகான தருணங்கள்.
Coffee day கடையில் எதிரே இருந்த கவிதாவின் அழகை ரசித்த படியே, Coffee யை ருசித்த படியே அவள் கைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான் ராஜா.
கவிதா: என்னடா பேசலாம்னு கூப்ட்ட..ஒன்னுமே பேசாம அரை மணி நேரமா என் முகத்தையே பாத்துட்டு இருக்க?என்ன சொல்லனுமோ சீக்கீரமா சொல்லு ..Tuition அ பங்க் பன்னிட்டு வந்திருக்கேன்.
ராஜா: அது என்னமோ தெரியிலக் கவி ,,,நிறைய பேசலான்னுதான் வரேன்...But உன்ன பாத்தாலே fuse போன பல்ப் மாரி ஆய்ட்ரேன். Don’t know why?
கவிதா : (வெட்க்கப்பட்டு சிரித்த படியே) போடா Dogu ....ரொம்ப ஐஸ் வைக்காதே..
சுப்பிரமணியபுரம் பாட்டெல்லாம் கேட்டியா? எனக்கு அதில ஒரு பாட்டு ரொம்ப புடிச்சிருக்கு...
ராஜா: “ கண்கள் இரண்டால்..” பாட்டா?
கவிதா : ஆமாண்டா...Super Tune,Super Lyrics .I luvvv that song daa…
ராஜா: எனக்கு சும்மா call பன்னேன் ...
கவிதா : எதுக்கு?
ராஜா: சும்மா பன்னேன்..
கவிதா அவள் phone ஐ எடுத்து, contact listல் ராஜாத்தி என்று save செய்திருந்த நம்பருக்கு டயல் செய்தாள். ராஜா வின் phone “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் ....” என்று பாட ஆரம்பித்த்து.
ராஜா: நீ call பன்னா மட்டும் இந்த பாட்டு வரும் ...எப்பூடி...?
கவிதா கண்ணத்தில் குழி விழ சிரித்துவிட்டு, கண்ணில் ஆனந்தக்கண்ணீரோடு பறந்தாள்.
Waiter: Sir, Bill..
ராஜா: என்னது இது? 259 rupees ஆ....ஒரு Coffee தானே சாப்பிட்டோம்..
Waiter: நீங்க ஒரு Coffee தான் சாப்டீங்க... but Madam 2 coffee,2 egg sandwich,1 egg puff சாப்பிட்டாங்க.
ராஜா அப்படியா என்று Typing institute ற்கு கட்ட வேண்டிய பணத்தை எடுத்து பில்லை settle செய்தான்.
இந்த காட்சிகள் மங்கும் படி அவன் முகத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது.அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.வீட்டினுல் எப்படி மழை பெய்யக் கூடும் என்று யோசித்த படியே வீட்டின் சீலீங்கை பார்க்க தலையை மெல்ல தூக்கினான். தெரிந்தது வீட்டின் சீலீங்கல்ல .அவன் அம்மா முகம்.
“Exam கு டைம் ஆயிடுச்சிடா...எழுந்து சட்டு புட்டுனு கெலம்பர வழிய பாரு..”என்று கோபத்தோடு கத்தியபடி கையில் water ஜக்கோடு தன் அம்மா போவதைக் கண்டான்.
தூக்கத்தில் இருந்து எழுந்தான்; கனவில் இருந்து தெளிந்தான். புரிந்தது அவனுக்கு எல்லாம். இன்று அவனுக்கு +2 Board exam ஆரம்பம். நேற்று இரவு படிக்கும் போது “உலகம் அழிந்துவிடக்கூடாதா” என்று யோசித்தது அவன் நினைவிற்கு வந்தது. ஓடிப்
போய் charge ஆகிக் கொண்டிருந்த தன் SONY ERICSSON T60 Phoneஐ அவசரமாக எடுத்துப் பார்த்தான்.அதிலே கொட்டை எழுத்தில் “1 MISSED CALL – KAVITHAN”

குறிப்பு: கனவுலகத்திற்கும், நினைவுலகத்திற்கும், நிஜவுலகத்திற்கும் போட்ட முடிச்சி
“அந்த 5 நிமிடங்கள்”
- BJ

எழுதியவர் : BJ (18-Apr-12, 10:07 am)
பார்வை : 1289

மேலே