என்ன சொல்ல !நண்பா !

பிரிந்து இருந்தால் துக்கத்தில் துடிக்கிறது !
சேர்ந்திருந்தால் சந்தோசத்தில் துடிக்கிறது !
துடிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்திற்கு!
தூக்கத்தை தொலைத்து விட்ட
என் இரவுகள் !
கனவுகளில் உன் இனியமுகம் காணவே
இப்போதெல்லாம் உறங்க துடிக்கின்றன !
அரிதாக உன் நட்பு ஆரம்பத்தில்
எனக்கு கிடைத்தது ! - அது
அன்பையும் அனுபவத்தையும்
அள்ளித்தந்தது எனக்கு !
உன்னையும் என்னையும் மட்டுமல்ல,
நல்ல நட்பையும் உணரவைத்தது !
அந்த நட்பின் பிரிவை உணர்கையில்
என் இதயத்தில் ஒரு ஏக்கம் !
என் கண்களில் ஒரு தவிப்பு !
என் கால்களில் ஒரு தயக்கம் !
உன்னை பார்க்க மட்டோமா ?
உன்னிடம் பேசமாட்டோமா ?
எனும் ஒரு இனம்புரியா பயம் !
என்ன சொல்ல ! நண்பா !