ஆருயிர் தோழி

ஆருயிர் தோழி ..
பொன் நிற மாலை பொழுது
தோன்றினாய் நீ என் விழிகளோடு
ஆம் , இன்று நீ எனக்கு பிடித்த
வண்ண ஆடையில் அழகழகாய் ..
பல இனம் புரியாத சந்தோசம் எனக்குள்
என்னை தழுவும் தென்றல்
நீராடிவிட்டு தான் வந்ததோ !
இதோ ! அந்த கேள்வி எனக்குள்ளும்
இது காதலாய் மலருமா ?
ஒரு நொடி உன் அழகை நான்
ரசித்து விட்டேன் ...
ஆ ! என்னதொரு தவறு செய்தேன்
நான் பார்ப்பதை நீ உணர்ந்தாய் ...
என் மனதை நீ
படித்து விட்டாய் !
நீ பார்த்ததும்
மறைத்தேன் என்னை ..
நீ சொன்ன வார்த்தை
என் செவிகளில் ஒலித்தது
நீ ஒரு "GENTLEMAN "
குழப்பமாய் விழித்தேன் நான்
எனக்குள்ள கேள்விகளில்
உன் பதில் ..
நீ என்னை ரசித்தது உண்மை !
தவறாக ரசிக்கவில்லை என்பதும் உண்மை !!
மீண்டும் என் விழிகள் ...
உன் உடலளவில்
நான் ஒரு பெண் !
உன் மனதளவில்
நான் உன் தோழி !!
நீ என்னை ரசித்தது
உன் உடலளவில் ...
என்னை கண்டவுடன்
உன் மனம் சொன்னதை கேட்டது உடல்
ரசித்தது உண்மை !
தவறாக ரசிக்கவில்லை என்பதும் உண்மை!!
மீண்டும் அந்த சொல்
என் செவிகளில் ஒலித்தது
இதழ் விரித்த புன்னகையோடு நான் !
நீ ஒரு "GENTLEMAN ".

எழுதியவர் : அழகரசன் (18-Apr-12, 2:48 pm)
சேர்த்தது : Azhagarasan
Tanglish : aaruyir thozhi
பார்வை : 950

மேலே