வியாபாரமான மருத்துவம் - சிறப்பு கட்டுரை

ஒரு காப்பீட்டு நிறுவனதின் ஆய்வில் சராசரி இந்தியன் 12,036 ரூபாய் தனியார் மருத்துவமனையில் ஒரு நாள் தங்கி செலவு செய்கிறான் என்று கூறுகிறது. இந்தியாவில் மருத்துவம் என்பது வியாபார சந்தையாக உள்ளது. நோயாளிகளுக்கு அதிகபடியான கட்டணத்தை வசூலிக்க எந்த ஒரு தனியார் மருத்துவமனையும் தவறுவது இல்லை. பல மருத்தவமனைகள் நோயாளிகளின் அறியாமையையும், நோயின் தன்மையை பயன்படுத்தியும் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கிறது.

பெரும்பாலும் மருத்துவர்கள் பரிந்துரைகளை தங்கள் மருந்து கடைகளில் வாங்க கட்டாயபடுதுகின்றனர். விலை உயர்ந்த மருந்துகளையே அதிகமாக பரிந்துரை செய்கிறார்கள். தங்களிடம் மாட்டும் நோயாளிகளை பணம் ஈட்டும் இயந்திரமாக இன்றைய பெரும்பாலான மருத்துவர்கள் பார்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

சரியான அனுசரிப்பும், நல்ல கவனிப்பும் போதிய சிகிச்சை வசதியும் பல அரசு மருத்துவமனையில் இல்லாததால் ஏழை, நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மக்களை ஊக்குவிக்க அரசு பல நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்தது போல் தனியார் மருத்துவமனைகளிலும் கட்டணம் நிர்ணயம் செய்தால் சிறந்ததாகும்.
அணைத்து நோயாளிகளும் நல்ல அனுசரணையுடன் போதிய கவனிப்புடன் முறையான சிகிச்சை அரசு மருத்துவமனையில் பெறுவதை தீவிரமாக அரசு கண்காணிக்க வேண்டும். சில அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளித்தாலும் மக்களுக்கு அதை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.

மருத்துவம் என்ற புனிதமான சேவை இன்று வர்த்தகமானது நம் அனைவரின் துரதிருஷ்டவசம். நோயாளிகள் இல்லமால் மருத்துவர்கள் இல்லை, மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஏற்ற சரியான கட்டணத்தை வசூலித்தால் சாலச்சிறந்தது. இறைவனுக்கு அடுத்தபடியாக மருத்துவர்களை மக்கள் காண்கிறார்கள், அப்படி பட்ட மக்களை அதிக கட்டணம் வசூலித்து வஞ்சிக்காமல் மருத்துவர்கள் தங்கள் சேவையை சரியான கட்டணத்துடன் வழங்கினால் மிகவும் நல்லது.

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (19-Apr-12, 2:35 pm)
பார்வை : 641

சிறந்த கட்டுரைகள்

மேலே